நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது நேற்று முன்தினம்  நடைபெறது.   நாடு முழுவதும் 499 நகரங்களில் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடந்தது.  நாடு முழுவதிலும் இருந்து 18.72 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் எழுதினார்கள்.

இந்நிலையில் நீட் தேர்வு சற்று கடினமாக இருந்து என மாணவர்கள் கூறிய நிலையில், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 165 கேள்விகள் தமிழ்நாடு மாநில பாட திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டிருந்தது. எனவே, மாணவர்கள் தமிழக அரசின் பாடத்திட்டத்தை படித்தாலே எளிதில் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என தெரிவித்தனர்.