அலிகர் மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் ஆதம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஹோரிலால்(65)-கங்காதேவி(63) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்துமா நோயினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஹோரிலால் உடல்நிலை மோசமானதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை மதியம் 12 மணிக்கு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் அவரது மனைவி இறந்துவிட்டார் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சடைந்த அவர் மன அழுத்தத்தில் அதே நாள் மாலை 6 மணி அளவில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரின் உடல்களும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.