
சென்னை மக்கள் காணும் பொங்கலான கடந்த 16ம் தேதி அன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் லட்சக்கணக்கானோர் குனிந்தனர். இவர்கள் அங்கு இருக்கும் தின்பண்டங்களை வாங்கி உண்டு விட்டு, குப்பைகளை கடற்கரையிலேயே போட்டு சென்றுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நூறு டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெரினா கடற்கரை குப்பை கூளமாக மாறுவதற்கு மக்கள் தான் காரணம் என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும் காணும் பொங்கல் அன்று விடுமுறை அளிப்பதை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு பரிந்துரைப்போம் என்று பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.