தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எழுதி இருந்த கடிதத்துக்கு ஆளுநர் மளிகை விளக்கம் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு செய்தி குறிப்பு என்று ஒன்று  வந்திருக்கிறது.  முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை எப்படி ஆளுநர் மாளிகை தருகிறார்கள் ? என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

முதலாவதாக ஆளுநர் சொல்வது:

முன்னாள் அதிமுக அமைச்சர்களான பிவி.ரமணா, டாக்டர் சி விஜயபாஸ்கர் இவர்கள் மீது குட்கா வழக்கு சம்பந்தமாக சிபிஐ அனுமதி கேட்டு இருக்கிறது என்கின்ற குற்றச்சாட்டை நேற்று சொல்லி இருந்தோம். அதற்கு ஆளுநர் பதில் தரவில்லை. ஆனால் சட்ட ஆலோசனையில் இருக்கின்றது என்று விளக்கம் கொடுத்த ஆளுநர்,  CBI அனுமதிக்கான கோப்பு வந்திருக்கிறதா ?

வரவில்லையா ?… சிபிஐயில் இருந்து அனுமதி கேட்டு  தந்திருக்கிறார்களா அல்லது அரசிடம் இருந்து அனுமதி கேட்டு வந்திருக்கிறதா ? என்பதை பற்றி எல்லாம் குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவாக ஒரு பதிலை தந்திருக்கிறார்கள்.

ஆளுநர் மாளிகையின் பதில் கொள்ளக்கூடிய பதில் அல்ல. அவர் தெளிவாக பதில் தர வேண்டும். சிபிஐயில் இருந்து எங்களுக்கு எந்தவிதமான கடிதமும் வரவில்லை,  அரசிடம் இருந்து தகவல் இல்லை என்று சொல்லியிருந்தால்…. முழு மறுப்பை எங்களால் தெரிவிக்க முடியும்,  பதிவு செய்ய முடியும்.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பிவி ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கரின் குட்கா வழக்கில் சிபிஐ இன்வெஸ்டிகேஷன் விசாரணை செய்துவிட்டு தான் ஆளுநரிடம் விசாரணைக்கு அனுமதி கேட்டு அணுகி இருக்கிறார்கள் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

12/9 / 2022 அன்று சிபிஐ மூலமாகவும்,  அரசின் மூலமாகவும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டு, அவரின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. கடிதத்தை வாங்கிக் கொண்டோம் என்பதற்கான ஒப்புதலை ஆளுநர் மாளிகை  தெரிவித்து இருக்கின்றது.

இரண்டாவதாக..

முன்னாள் அதிமுக அமைச்சர் கேசி வீரமணி அவர்களை பற்றியதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால்? அன் ஆத்தண்டிகேடட் காப்பி எதுவும் தரவில்லை என்று சொல்லி இருக்கிறார். 12/9/2022 அன்று முழு ஒரிஜினல் பைல்  அவருக்கு அனுப்பப்பட்டு விட்டது.

ஒரிஜினலான பைல்லை அவருக்கு அனுப்பப்பட்டிருக்கின்ற போது,  அங்கே ஆதண்டிகேட்டட் காப்பியை தர வேண்டியதில்லை. பைலே அவங்ககிட்ட இருக்கு. கே.சி வீரமணி குற்றசாட்டு குறித்து,  அவர் எதை வேண்டுமானாலும் தெளிவாக தெரிந்து கொள்வதற்கு முழு கோப்பும் அவருக்கு  அனுப்பப்பட்டுள்ளது.

மூன்றாவதாக…. 

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை பற்றி எந்த ஆவணமும் கிடையாதுன்னு சொல்லி இருக்கிறார். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான  ஒன்று. 15/ 5/ 2023 அன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர் அனுமதி கேட்டு அரசிடமிருந்து அங்கே கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே ஆளுநர் பத்திரிகை செய்திகளாக தந்திருப்பது உண்மைக்கு புறம்பானது. ஆளுநர் மாளிகை ஏன் உண்மைக்கு புறம்பான தகவல்களை துருக்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை என தெரிவித்தார்.