தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநகர காவல் துறை சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது புதிய சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை புதிய மேம்பாலம் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு 621 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த பாலத்தின் வழியாக பயணம் செய்யும்போது மக்களுக்கு பயன நேரம் 15 நிமிடங்கள் குறையும் எனவும் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க வேண்டிய அவசியமும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.