தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களின் நலனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வி, கற்றல் கற்பித்தல் நடைமுறை மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து சிறப்பு திட்டங்களின் செயல்பாடுகளும் எந்த அளவில் உள்ளது என்பதை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று தற்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிக்கல்வித்துறை மூலமாக செயல்பட்டு வரும் திட்டங்களை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக பள்ளிக் கல்வி செயல்பாடுகளை கண்காணித்து இல்லம் தேடி கல்வி, என்னும் எழுத்தும் திட்டம் மற்றும் மாணவர்களின் கற்றல் வெளிப்பாடு ஆகிய திட்டங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.