தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் NIC ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. இவர் அஜித் மற்றும் சிம்புவின் படங்களை தான் அதிகமாக தயாரித்துள்ளார். அதன்படி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ராசி, முகவரி, சிட்டிசன், வாலி, வில்லன் போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக சிம்புவின் நடிப்பில் வெளியான வாலு படத்தை சக்கரவர்த்தி தயாரித்திருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கொடிய நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தயாரிப்பாளர் சக்கரவர்த்தி சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்த தகவல் சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.