பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி கேஜிஎஃப் 2 வெளியாகி உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. கேஜிஎஃப் 3 படம் கண்டிப்பாக வரும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை தற்போது தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு நினைவுகூர்ந்துள்ளது.

வீடியோவின் கடைசியில் கேஜிஎப்3 அறிவிப்பையும் சூசகமாக படக்குழு வெளியிட்டுள்ளது. கேஜிஎஃப் 3 படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கேஜிஎப்3 படத்திற்கான அறிவிப்பை மறைமுகமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.