சமூக ஊடகங்களில் தாய்ப்பாசம் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும் நிலையில், தற்போது ஒரு தாய் நெருப்புக்கோழி பறவையின் தைரியம் மற்றும் பாசம் குறித்த வீடியோ ஒன்று அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான வீடியோவில், பசியுடன் இருந்த ஒரு பெரிய கழுகு ஒன்று, நெருப்புக்கோழி பறவையின் சிறிய குஞ்சுகளை தூக்கிச் செல்லத் திட்டமிட்டு வானத்திலிருந்து திடீரெனப் பாய்ந்து வருகிறது. அப்போது, அந்தக் குஞ்சுகள் தன்னைக் காத்துக்கொள்ளும் நிலையில் இல்லாததை உணர்ந்த தாய் நெருப்புக்கோழி, உடனடியாகப் பதிலடி கொடுக்கத் தயாராகிறது.

பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்ட நெருப்புக்கோழி பறவைகள், தங்கள் குழந்தைகளுக்கு ஆபத்து வரும்போது மிகவும் ஆக்ரோஷமாக மாறிவிடும் என்பதை இந்த வீடியோ நிரூபித்துள்ளது. தாய்ச் நெருப்புக்கோழி, தனது சிறிய குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காகத் தன் இறக்கைகளை முழுவதுமாகப் விரித்து ஒரு கேடயம்போல மறைத்துக்கொள்கிறது. பின்னர், முன்னால் வந்து அந்தப் பயங்கர வேட்டைக்காரனான கழுகின் மீது நேரடியாகத் தாக்கி, உதைக்கிறது.

நெருப்புக்கோழியின் இந்த பலமான உதைக்கு ஈடுகொடுக்க முடியாத கழுகு, வேறு வழியின்றித் தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், கழுகு மீண்டும் தாக்கும் துணிவில்லாமல் பறந்து சென்றது. @sciencegirl என்ற பெயரில் ‘X’ தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து, “தாயின் பாசத்திற்கு ஈடேதுமில்லை” என்று தாய்ச் சிவிங்கியைப் பாராட்டி கருத்துத் தெரிவித்துள்ளனர்.