ஆட்டோமேட்டிக் போட்டு தூங்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஜெர்மனியில் ஒரு நபர் டெஸ்லா வாகனத்தை ஆட்டோ பைலட் முறையில் ஆன் செய்துவிட்டு தூங்கியவரை காவல் துறையினர் விரட்டி பிடித்துள்ளனர். ஜெர்மனியில் ஏ 70 என்ற நெடுஞ்சாலையில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற அவரை காவல்துறையினர் நிறுத்த முயற்சித்தனர். 15 நிமிடங்களாக காவல்துறையினர் அந்த வாகனத்தை விடாமல் துரத்தி சென்றனர். பின்பு அந்த வாகனத்தை ஓட்டிய நபர் தூங்கி எழுந்த பின் காவல்துறையின் அறிவுரையின் படி உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் வாகனத்தை தானியங்கு முறையில் செயல்பட செய்துவிட்டு உறங்கியது தெரியவந்தது.