
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிங்க பொம்மையை பார்த்து தெரு நாய் பயந்து ஓடும் காட்சிகள் வீடியோவாக இணையத்தில் பரவி வரும் நிலையில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதாவது ஒருவர் சிங்கம் போல உருவம் கொண்ட ஒரு பொம்மையை கொண்டு வந்தார். அதனை அப்பகுதியின் சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த தெருநாயின் அருகே வைத்தார்.
அதோடு அதனருகே ப்ளூடூத் ஸ்பீக்கரை வைத்து விட்டு தள்ளி சென்றார். பின்னர் நாயிடமிருந்து சிறிது தூரம் தள்ளி நின்ற அவர் அந்த ஸ்பீக்கரில் சிங்கத்தின் கர்ஜனையை தனது செல்போன் மூலம் ஒலி எழுப்பினார். அப்போது பலத்த சத்தத்தை கேட்ட அந்த தெருநாய் விழித்த நிலையில் முன்னாடி நின்ற சிங்கத்தின் உருவத்தை பார்த்து பயத்தில் குரைத்துக் கொண்டே பதறி அடித்து ஓடியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கோடிக்கணக்கான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.
野良犬ドッキリ pic.twitter.com/yxMwt5RgQo
— 手を繋げない人間 (@nohandhuman) March 29, 2025
இதைத் தொடர்ந்து இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் சிலர் ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். அதில் குறிப்பாக சிலர் சிரிக்கும் எமோஜிகளுடன் பதில் அளித்திருந்தனர். இன்னும் சிலர் இது வேடிக்கையாக அல்ல? .. இது யாருக்கு சிரிப்பாக இருக்கிறது?..சில நாய்கள் இப்படி பயத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம் “என்று கண்டித்து கூறியிருந்தார். மேலும் இந்த வீடியோ பிராணிகள் மீது செய்யப்படும் வேடிக்கைகள் எவ்வளவு வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்ற புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.