இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு வாங்குவது பலருடைய கனவாகவும் இருக்கிறது. வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குவதற்கான பல நிபந்தனைகளை நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் மூத்த குடிமக்கள் தங்களுடைய வயதின் காரணமாக வீட்டு கடன் தகுதி பெற முடியுமா? என்று சந்தேகம் எழுந்து வருகிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஓய்வு பெற்றவர்கள் உட்பட வயதான விண்ணப்பதாரர்களுக்கான வீட்டு கடன்களை கொடுக்கின்றன.
பொதுவாக கடன் முதிர்ச்சி அடையும் பொழுது அதிகபட்ச வயது 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்படியானால் 60 வயதுடைய ஒருவர் அதிகபட்சமாக 10 வருடத்திற்குள் செலுத்த முடிவதற்கான கடனை பெறலாம் . வாடகை வருமானம், பிக்சட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வருமானம் ஓய்வூதிய வருமானம், கடன் பெறுவதற்கான தகுதியை மேலும் அதிகரிக்கும். மேலும் குறுகிய தவணைக்காலம் இருப்பதால் அதிக தொகையை வட்டியாக செலுத்த வேண்டியது இருக்கும். முதியவர்களுக்கு கடன் செலுத்தும் ஆபத்தை குறைக்க தவணை காலத்தை குறைக்கின்றன. ஒருவர் இளமை காலத்தில் கடனை 20 வருடத்தில் செலுத்தும்படி பெறலாம். ஆனால் மூத்த குடி மக்களுக்கு ஐந்து, பத்து வருடங்கள் மட்டுமே கிடைக்கும்.
