நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகா காளப்பநாயக்கன்பட்டி, கோனூர், பொம்ம சமுத்திரம், செல்லியம்பாளையம், வாழவந்தி கோம்பை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பற்றி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்துள்ளார். அந்த வகையில் முதற்கட்டமாக காளப்பநாயக்கன்பட்டியில் தார்சாலை அமைக்கும் பணியையும் வாழவந்தி கோம்பை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன் பின் சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு விவரங்களை சரி பார்த்துள்ளார். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும்  இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யப்பட்ட பல்வேறு சான்றிதழ்கள் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை கணினியில் பார்வையிட்டும், விண்ணப்பம் பெறப்பட்ட நாள் மற்றும் சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு வருவாய் ஆய்வாளர் பரிந்துரை செய்த நாள் விவரம் போன்றவற்றை சரி பார்த்துள்ளார்.