
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது, தமிழ்நாடு பயங்கரவாத மாநிலமாக மாறிக்கிட்டு இருக்கு என சொன்னீங்க. இப்போ போதை மாநிலமாக மாறி உள்ளதை எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
நான் வருத்தத்தோடு பார்க்கின்றேன்… கண்ணீர் வருது…. தமிழ்நாடு இப்படி ஆயிடுச்சான்னு. அப்பவும் நான் சொன்னது உண்மைதான், இப்பவும் நான் சொல்றது உண்மைதான். அப்பவும் வருத்தத்தோடு தான் சொன்னேன். இப்பவும் வருத்தத்தோடு தான் சொல்றேன். குஜராத் தான் போதை பொருள் கடத்தல்ல முக்கியமான மாநிலம் என்று சொல்றீங்க. ராமேஸ்வரத்தில் அம்புட்டது என்ன ? அது போதை பொருள் இல்லைங்களா ? அதுவும் நார்மலா இல்ல… இத்தன எத்தனை குவாண்டிட்டி அம்புடிச்சி.
இவங்க ராமேஸ்வரம் அவங்களோடது இல்லைன்னு சொல்றாங்களா ? அதுவும் குஜராத்தில் இருக்குதா ? மன்னிக்கணும்… அவங்க எப்ப பாரு திருப்பி அடிச்சுட்டு, தான் பொறுப்ப கை கழுவிட்டு போயிடலாம்னு பாக்குறமுயற்சி பலிக்காது. திருப்பி திருப்பி திருப்பி… அது குஜராத்தில் இருந்து வந்துச்சு… இது இங்க இருந்து வந்துச்சு…. எங்க மேல பழி போடுறீங்க…. இனிமே செல்லுபடியாகாது… தமிழ்நாட்டுல கிடைக்கக்கூடிய போதை பொருள் வேறு எங்கு கிடைக்குமான்னு அவங்களே கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி பார்த்துக் கொள்ளட்டும்.
ராமேஸ்வரம் பக்கத்துல புடிச்சது யாரு ? அவங்க பிடிச்சது யாரு ? உள்ள வர விட்டோமா, கை பற்றபட்டு அது அப்பவே பப்ளிக்ல எரிக்கிறோம், ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி டிரக்ஸ் எல்லா சரக்கையும் எரிச்சிருதோம். இப்ப இலங்கைக்கு பக்கத்துல எங்க இருந்து வந்ததோ, ராமேஸ்வரத்தில் வந்து விட்டது. அதையும் எரிப்போம்.
ஆனால் அது இங்க வந்துச்சா ?இதை புடிச்சது யாரு ? அதனால இதே 50, 60 வருஷமா பொய். எப்ப பாரு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் மேல போடுறது… எனக்கு வருத்தம் என்னன்னா…. ஒரு தேசிய கட்சியாக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி ஒரு தேசிய அளவில் யோசிச்சிட்டு, செப்பரேட் பாஷையில் பேசக்கூடிய கட்சிகளுக்கு பதில் கொடுக்காமல், இன்னைக்கு அடங்கி போயி அவங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டின் நிலை மன வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்தார்.