சுரங்கப்பாதை பணிகளால் ஜோசிமத் நகரில் விரிசல்கள் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்கு என்டிபிசி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜமோலி மாவட்டத்திலுள்ள ஜோசிமத்தில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் அண்மைகாலமாக விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிசி மின் உற்பத்தி நிலையத்தின் சார்பாக சார்பில் நீண்ட சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதே இந்த விளைவுகளுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதனை மறுத்துள்ள என்டிபிசி நிறுவனம் டனல் போரிங் எந்திரத்தின் மூலமே சுரங்கப்பாதை அமைக்கப்படுகின்றது என்றும் வெடிபொருட்கள் பயன்படுத்துவது இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.