
கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள மனந்தவாடி என்ற பகுதிக்கு அருகே காபி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் ராதா(45) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது. அவரை புலி ஒன்று தாக்கி கொன்று, அவரது உடலின் பாதியை புளி தின்றிருக்கும் என்று சந்தேகப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வீராங்கனை மின்னு மணியின் நெருங்கிய உறவினர் ராதா.
மின்னு மணி வயநாட்டை சேர்ந்தவர் ஆவர். இந்நிலையில் அவர் தனது சமூக ஊடகப் பதிவில் புளியை விரைவில் படித்து உள்ளூர் மக்களுக்கு அமைதி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு வயநாடு தொகுதியின் எம்.பி பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்றும் புலி அந்த வழியே சென்றுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். புலியை கூண்டு வைத்து பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.