ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் விளையாடி வருகிறது. 4-வது டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் மேட்ச் இன்று தொடங்கிய சில மணி நேரத்திலேயே அஸ்வின் ஆஸ்திரேலியா வீரர் குஹ்னெமன் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் இந்த BGT தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிய 15 வீரர்களையும் (அனைத்து வீரர்களையும்) அவுட் ஆக்கிய பவுலர் என்ற வரலாற்று சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதுவரை இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் அஸ்வின் 25 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.