நைகோல் கிளெர் என்ற பெண் தான் வாங்கிய வீட்டில் 120 ஆண்டுகள் பழமையான ரகசிய அறை ஒன்று உள்ளதாக வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரண்டாகி வருகிறது. இந்த வீடியோவில் முதலில் தரையோடு தரையாக உள்ள கதவை திறந்து உள்ளே பார்த்தால் படிக்கட்டுகள் தெரிகிறது. அதன் பின்னர் உள்ளே செல்ல செல்ல புத்தகங்கள் அலமாரியில் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டு பழமையான சோபாக்கள் வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது, ரகசிய அறை இருப்பது உண்மைதான் ஆனால் அது புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட அறையாக காட்டப்படுவது எனது கற்பனையாகும். இப்படி ஒரு ரகசிய நூலகம் இருக்க வேண்டும் என்பது எனது கனவாகும் என குறிப்பிட்டு இருந்தார். ரகசிய அறைக்குள் பொன், வைரம் போன்றவற்றை எதிர்பார்ப்பவர்கள் மத்தியில் புத்தக அறையாக நினைப்பது மிகவும் அரிதாகும் என பலரும் இந்த வீடியோவுக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சுமார் 97 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
View this post on Instagram