சமூக வலைத்தளங்களில், பேச முடியாத (ஊமை) டெலிவரி பாய் ஒருவர், முகவரியைக் கண்டுபிடித்து வாடிக்கையாளரிடம் பேச முடியாமல் சிரமப்படும் வீடியோ ஒன்று வெளியாகி, பலரையும் உருக்கிவிட்டது.

ஒரு மளிகை டெலிவரி செய்யும் செயலிக்காக (Grocery Delivery App) வேலை செய்யும் அந்த டெலிவரி பாய், ஒரு வாடிக்கையாளரின் வீட்டருகே வந்து, சைகைகள் மூலம் உதவிக் கேட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by 𝐒𝐚𝐦𝐦𝐲_𝗗𝗶𝗹 𝗦𝗲🤎 (@sammy_dilse143)

அப்போது, அந்த இடத்தில் இருந்த ஒரு நபர், டெலிவரி பாயின் சிரமத்தைக் கண்டு, முன்னே வந்து அவருக்கு உதவ முன்வந்தார். அந்த நபர், வாடிக்கையாளரிடம் போனில் பேசி, டெலிவரி பாயின் நிலையை விளக்கி, அவரைச் சரியான இடத்திற்கு அனுப்பி வைத்தார். வீடியோவைப் பகிர்ந்த அந்த நபர், “கடவுள் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்திருந்தும் நாம் குறை கூறுகிறோம்.

ஆனால், இந்தக் குறையுள்ள மனிதர் தன் பலவீனத்தைக் காரணமாகக் காட்டாமல் உழைக்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த உணர்வுபூர்வமான வீடியோவைக் கண்ட பலரும் கண்ணீர் விட்டதாகவும், “கடவுள் இந்த உதவி செய்தவருக்கு ஆசீர்வாதம் வழங்குவார்” என்றும், “ஊனத்தை ஒரு குறையாக நினைக்காமல் உழைப்பவர்களைப் பாராட்ட வேண்டும்” என்றும் பதிவிட்டு வருகின்றனர்.