பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது பிரியங்கா சோப்ராவுக்கு ஹாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில் அவர் நடித்த சிட்டாடல் என்ற வெப் தொடர் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா சோப்ரா தன் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசி உள்ளார். அதாவது கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு படத்தில் ரகசிய ஏஜென்ட் ஆக நடித்துள்ளார்.
அந்தப் படத்தில் ஆண் ஒருவரை வசியம் செய்வது போன்ற காட்சி இடம்பெறும். அந்த காட்சியில் இயக்குனர் பிரியங்கா சோப்ராவை வெறும் உள்ளாடையுடன் மட்டும் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக அவரின் ஒப்பனையாளரை அழைத்து பிரியங்கா சோப்ராவின் ஆடையை கழட்டி காண்பிக்க சொல்லியுள்ளார். உள்ளாடையை காண்பித்தால் தான் ரசிகர்கள் பார்க்க ஆசைப்படுவார்கள் என்று அந்த இயக்குனர் கொச்சையாக பேசி உள்ளார். இதனால் மனம் உடைந்த பிரியங்கா சோப்ரா இரண்டு நாட்களில் மட்டும் அந்த படத்தில் நடித்த நிலையில் படத்திலிருந்து விலகி விட்டார். மேலும் இயக்குனர் தன்னிடம் அப்படி கூறியது மனரீதியாக தன்னை மிகவும் பாதித்ததாக ப்ரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.