உத்தரபிரதேத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூகத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மாணவி ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து மாணவியை காப்பாற்றி வெளியே கொண்டு வந்து, குடும்பத்தினருக்கு தகவலளித்தனர். அதன்பின் மாணவியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடந்தது. அப்போது, பயிற்சி மையம் ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி கல்வி கற்க சென்று உள்ளார். இதற்கிடையில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.

இதனால் அதை வாங்கி குடித்ததில் மாணவி மயக்கமடைந்துள்ளார். அதனை தொடர்ந்து பயிற்சி மையத்தின் ஆசிரியரும், அம்மையத்திலுள்ள இளைஞர்களும் மாணவியை பலாத்காரம் செய்து, வீடியோவும் எடுத்துள்ளனர். மேலும் வீடியோவை காட்டி மிரட்டி மாணவியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதேபோல் 12க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நடந்துள்ளது. இது தொடர்பாக அறிந்ததும் மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளனர். அங்கு  காவல்துறையினர் புகாரை பதிவுசெய்ய மறுத்துவிட்டனர் என சொல்லப்படுகிறது. அதோடு குளிர்பானங்களை ஏன் வாங்கி குடிக்கிறாய்? என கேட்டு போலீசார் அந்த மாணவியை கன்னத்தில் அறைந்துள்ளார்” என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது..