தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவருடைய நடிப்பில் தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாத்தி” படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் வருகிற 17-ம் தேதி நேரடியாக திரையரங்குகளில் ரீலிஸ் ஆகவுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி உட்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் புதுப்புது புரமோஷன் வீடியோக்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கும் புது புரோமோஷன் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.