தசை தொடர்பான மயோசிட்டிஸ் என்ற நோயுடன் போராடி வந்த சமந்தா மெதுவாக பழைய நிலைமைக்கு மீண்டு வருகிறார். நோயின் பாதிப்பு தீவிரமாக இருந்தபோதே விடாமுயற்சியுடன் உடற்பயிற்சி செய்து வந்த சமந்தா நம்பிக்கையோடு நோயை எதிர்த்து போராடி வந்தார்.

தற்போது படிப்படியாக குணமாகி வரும் சமந்தா, ஒர்க் அவுட் செய்யும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில்  அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவை பார்த்த சமந்தா ரசிகர்கள் அவரின் கடின உழைப்பையும் நேர்மறையான அணுகுமுறைகளையும் பாராட்டி வருகின்றனர்.