தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இப்போது டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே தனுஷின் பிறந்தநாளான ஜூன் 28-ம் தேதி “கேப்டன் மில்லர்” படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் 3 பாகங்களாக உருவாகவுள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் பாகம் 1940-களில் நடக்கும் நிகழ்வுகள் கொண்டதாகவும், 2-ம் பாகம் 1990-களில் நடக்கும் நிகழ்ச்சியாகவும் 3-ம் பாகம் இன்றைய காலக்கட்டத்தில் நடப்பது போல அமையப்பெறும் எனவும் சொல்லப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.