நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி குழந்தை பெற்ற பின் மீண்டும் உடல் எடையை குறைத்து இப்போது சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். அவர் இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் காஜல் இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவால், அவர் சினிமாவை விட்டே விலக போகிறார் என்று தகவல் பரவியது.

அவர் 2-வது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரரோ எனவும் ஒரு கேள்வி எழுந்தது. தற்போது காஜல் அகர்வால் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். அதாவது “நான் அப்படி கூறவே இல்லை. நான் திரையுலகில் இருந்து விலகவில்லை. இன்னும் நீண்ட காலத்துக்கு சினிமாவில் இருப்பேன் என தெரிவித்து உள்ளார். இதன் வாயிலாக பொய்யாக பரவிய செய்திக்கு காஜல் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.