துருக்கி நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 8,000-த்தை கடந்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் வாழ்ந்து வரும் தமிழர்கள் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு உதவுவதற்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையம் தயாராக இருக்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் உதவி ஏதேனும் தேவைப்பட்டால் உடனடியாக இந்த தொலைபேசி எண்களுக்கு 044-28525648 , 044-29515288 தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.