பாகிஸ்தான் நாட்டில் ராவண் பிண்டி என்ற பகுதிக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த கார் ஒன்று பேருந்தின் மீது பலமாக மோதியது. இதில் பேருந்தும் காரும் அருகில் உள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஆனால் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்ஃபி மற்றும் பிரதமர் ஷபாஷ் ஷரீஃப் இருவரும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.