பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் பயணியான அனிருத் என்பவருக்கு ஜன்னல் இருக்கைக்காக கூடுதல் தொகையை வசூலித்துள்ளது. ஆனால் அந்தப் பயணிக்கு ஏர்வேஸ் நிறுவனம் பயணத்தின் போது ஜன்னல் இல்லாத இருக்கையையே ஒதுக்கியுள்ளது. இதனால் அந்த பயணி கூடுதல் தொகை கொடுத்தும் ஜன்னல் இல்லாத இருக்கை கிடைத்துள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இதனால் அனிருத் அந்த இருக்கையை சுட்டிக்காட்டி, அதில் “விமானம் தரையிறங்கும் போது அழகான காட்சிகளை பார்ப்பதற்காகவே எனது வலது புற ஜன்னல் இருக்கைக்கு நான் கூடுதல் பணம் செலுத்தினேன். எனது ஜன்னல் இருக்கை எங்கே போனது? பிரிட்டிஷ் ஏர்வேஸ்” என்று பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.