மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து தளபதியும், லோகேஷ் கனகராஜூம் இணைந்திருக்கும் லியோ படத்தின் புரொமோ வீடியோ வெளியாகி அப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது. இதில் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் , மிஷ்கின், திரிஷா உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போது இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடக்கிறது.

இந்நிலையில் லியோ படத்தில் மேலும் ஒரு வில்லன் இணைந்துள்ளார். அதாவது கோலி சோடா, டானாக்காரன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த மதுசூதனன்தான் தற்போது லியோ படக்குழுவினருடன் இணைந்துள்ளார். இது தொடர்பான போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன் என பெரிய பட்டாளமே உள்ள நிலையில், தற்போது மதுசூதனும் இணைந்துள்ளார்.