தென் இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் உருவாகிறது. அதோடு சைரன், ரகு தாத்தா என சில திரைப்படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி உடன் இணைந்து போலோ ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நானியுடன் கீர்த்தி இணைந்து நடித்திருக்கும் தசரா படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.

இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு வெண்ணிலா என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த கதாபாத்திரத்திற்காக கீர்த்தி சுரேஷ் மேக்கப் போட்டு ரெடியாகும் வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.