தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நானி. இவர் தமிழில் கடந்த 2011ம் வருடம் வெளியாகிய வெப்பம் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் தசரா படம் மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உட்பட பல பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர்.

அண்மையில் தசரா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இதனிடையே சில ரசிகர்கள் தசரா படம் புஷ்பா திரைப்படத்தின் காப்பி என்று பதிவிட்டு வந்தனர். இதற்கு பதிலளித்த நானி “பனியன் லுங்கி இது மட்டும்தான் புஷ்பா படத்தில் வருவது போல் இருக்கும். ஆனால் தசரா படம் ரிலீஸ் ஆன பிறகு நீங்கள் படத்தை வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள்” என கூறியுள்ளார்.