தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 10 வருடங்களாகவே நடிகர் விஜய்க்கு அரசியல் மீது ஆர்வம் இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தளபதி விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கும் நிலையில் தற்போது பிரபல இயக்குனர் விக்ரமன் நடிகர் விஜய்க்கு அரசியலில் ஆசை இல்லை என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயின் முதல் வெற்றி படமான பூவே உனக்காக படத்தில் இயக்கியவர் விக்ரமன். இவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது, நடிகர் விஜய் மிகவும் அமைதியான மனிதர். அவரின் குணத்திற்கு அரசியல் செட் ஆகுமா என்று தெரியவில்லை. நடிகர் விஜய்க்கு அரசியலில் ஆர்வம் இருக்காது என்று தான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் விக்ரமன் விஜய்க்கு அரசியலில் ஆசை இல்லை என்று சொன்னது தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.