தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் ஹிந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி ஹிந்தியில் வெளியான சாந்த் ஷா ரோஷன் ஷேஹ்ரா படத்தின் மூலம் நடிகை தமன்னா முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்த வருடம் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தனுஷ், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த தமன்னா தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதேபோன்று பாலிவுட் மற்றும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது சினிமாவுக்கு வந்து 18 வருடங்களாகியுள்ளது. இது குறித்து நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, சினிமாவின் 18 வருடங்களாக நிலைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். ரசிகர்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். இது ஆரம்பம் மட்டும் தான். நான் ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். என்னுடைய 18 வருட சினிமா பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். மேலும் நடிகை தமன்னா சினிமாவில் அறிமுகமாகி 18 வருடங்கள் ஆனதால் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.