தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. நடிகர் விஜய் பல முன்னணி இயக்குனர்களுடன் சேர்ந்து நடித்துள்ள நிலையில் சில காரணங்களால் பல இயக்குனர்களின் படங்களை நிராகரித்துள்ளார்.

குறிப்பாக இயக்குனர்கள் கௌதம் மேனன், சுந்தர் சி மற்றும் மணிரத்தினம் ஆகியோரின் இயக்கத்தில் பட வாய்ப்புகள் வந்த போதும் சில காரணங்களால் அதை விஜய் நிராகரித்துவிட்டார். குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் தான் ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்புக்கு தாமதமானதால் விஜய் அந்த படத்தில் இருந்து விலகி விலகிவிட்டார். இதேபோன்று சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்திலும் நடிகர் விஜய் தான் முதலில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போன நிலையில் அர்ஜுன் அந்த படத்தில் நடித்தார்.

அப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு தான் சங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் விஜய் நடித்தார். நண்பன் ஒரு ரீமேக் படம் என்பதால் சங்கர் ஸ்டைலில் தான் ஒரு படத்தில் நடிக்க விரும்புவதாக விஜய் ஒரு மேடையில் வெளிப்படையாகவே பேசினார். நடிகர் விஜய்யின் பழைய வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் சங்கர் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த விஜயின் வீடியோவையும் தற்போது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் சிங்கம், உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களையும் நடிகர் விஜய் மிஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.