பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, விக்ரம், மாஸ்டர் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இயக்குனர் லோகேஷ் அடுத்ததாக யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் மீண்டும் விஜயுடன் இணைந்தார். லியோ படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெற இருக்கிறது.

அக்டோபர் 19-ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினி படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்க ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதுதான் நடிகர் ரஜினியின் கடைசி படமாக இருக்கும். கிட்டத்தட்ட லோகேஷ் ரஜினி படத்தை இயக்குவது உறுதியாகிவிட்டதாக கூறப்படும் நிலையில், நடிகர் விஜய் லியோ படம் ரிலீசான பிறகு அடுத்த பட அறிவிப்பை வெளியிடுங்கள் என லோகேஷ் கனகராஜிடம் கூறிவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் தற்போதே அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டால்  லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பதால் விஜய் இப்படி சொல்லியுள்ளாராம். இதே போன்று தான் வாரிசு படம் வெளியான பிறகு லியோ பட அறிவிப்பை வெளியிடுமாறு விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் லோகேஷ் கனகராஜ் கைதி 2 மற்றும் விக்ரம் 2 படங்களையும் இயக்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.