வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய படம் “வாரிசு”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிய இந்த படம் சென்ற 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதையடுத்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான “வாரசுடு” சென்ற 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு படம் வெளியாகிய 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய்.150 கோடியை வசூல் செய்து உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் புது வசூல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் இப்படம் வெளியாகிய 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்து உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.