ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு தடபுடலான விருந்து வைப்பது சமீப வருடங்களாக புகழ்பெற்று வருகிறது. கடந்த வருடம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் தன் மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார். இந்த வருடம் எலுரு நகரை சேர்ந்த தொழிலதிபர் பீமாராவ் அச்சாதனையை முறியடிக்க முடிவு செய்தார்.

இவரது மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகில் உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்திருந்தார். இந்த வருடம் முரளிதருக்கு தலை பொங்கல் ஆகும். இதனால் முரளிதரையும், மகள் குஷ்மாவையும் பீஷ்மாராவ் தன் வீட்டுக்கு தலைபொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார். அதன்படி அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. விருந்தில் மொத்தம் 379 வகை உணவுகள் பரிமாறப்பட்டது. அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சியடைந்தார். இந்த விருந்து பற்றி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.