கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியில் வசித்து வருபவர்கள் பைரவ்-ஸ்ரீவித்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை இருக்கிறது. இதில் ஸ்ரீ வித்யா தன் முதல் குழந்தை பிறந்ததிலிருந்து தாய்ப் பால் தானம் செய்யவேண்டும் என முடிவு செய்தார். இதுகுறித்து தன் கணவர் பைரவிடம் அவர் தெரிவித்து உள்ளார். அவரும் ஆர்வம் காட்டியதால் தாய்ப் பால் தானம் பற்றி அறிவதற்கு இணையத்தில் தேடியுள்ளனர்.

அதன்பின் மகப்பேறு மருத்துவர்கள் உதவியுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அமிர்தம் தாய்ப்பால் தானம் தன்னார்வ தொண்டு நிறுவனம் வாயிலாக தன் 2-வது பெண்குழந்தை பிறந்த 5-வது நாளிலிருந்து தாய்ப்பால் தானம் செய்து வருகிறார் ஸ்ரீவித்யா. அந்த வகையில் சென்ற 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப் பால் தானம்செய்து ஏசியா புக் ஆப் சாதனை படைத்திருக்கிறார் ஸ்ரீவித்யா.