ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து 49 சுயேட்சைகள், 25 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசிய மாநில கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்கு பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் உள்ள 80 வயதான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தபால் வாக்குகள் பெறப்பட இருக்கிறது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 321 முதியவர்கள் மற்றும் 31 மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். 2 நாட்கள் வீடு வீடாக சென்று இவர்களிடம் இருந்து தபால் வாக்குகளை பெற திட்டமிடப்பட்டுள்ளது.