பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜீர் (Bajaur) மாவட்டத்தில் நேற்று இரவு அரங்கேறிய தற்கொலை படை தாக்குதல் உலகையே அதிர வைத்துள்ளது.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவத்தின் பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது மோதி பயங்கரவாதிகள் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் அந்த இடமே போர்க்களம் போல மாறிய நிலையில், 11 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், இந்த வெடிவிபத்தில் அருகில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்ததில் பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்குத் தடைசெய்யப்பட்ட டிடிபி (TTP) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு தப்பியோடிய 12 பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ள போதிலும், எல்லையோர மாவட்டங்களில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.