சீன அதிபர் ஜி ஜின்பிங் அண்மையில் தனது ராணுவ துருப்புகளை போருக்கு தயாராக இருக்குமாறு உத்தரவிட்டது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவானைச் சுற்றி சீனா தனது ராணுவத்தை பலப்படுத்துவதில் தொடங்கிய இந்த நடவடிக்கைகள், மூன்றாம் உலகப்போரின் அச்சத்தை அதிகரித்துள்ளது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ ராக்கெட் படையினை ஆய்வு செய்த ஜி ஜின்பிங், ராணுவ வீரர்கள் தங்கள் போர் திறன்களை மேம்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

சீனா கடந்த இரண்டு ஆண்டுகளாக பல முறை தைவானைச் சுற்றி தனது படைகளை நிலைநிறுத்தி மிரட்டிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தைவான், சீனாவின் இந்த அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் தைவானின் விமானங்கள், கடற்படைகள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் சீன ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க அனுப்பப்பட்டன.

சீன அரசியல் தலைவர்கள் தைவானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என முன்னரே தெரிவித்தனர். சீனாவின் இந்த நடவடிக்கைகள் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், இஸ்ரேல், உக்ரைன், ஹமாஸ் போன்ற மோதல்களும் உலகில் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இன்னும் முடிவடையாமல் நீடித்து வரும் நிலையில், சீனாவின் போர் உத்தரவுகள், சர்வதேச அமைதிக்கு பெரிய சவாலாக உருவாகின்றன.