டெல்லியின் நிர்மான் விஹார் காலனி, ப்ரீத் விஹார் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீ பரவியதற்கான காரணம் தற்போது தெரியவில்லை. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் முழுவதும் தீ பரவியதாக கூறப்படுகிறது.

 

தீயணைப்பு அதிகாரி பிரோஸ் கான் அளித்த தகவலின்படி, “இரவு 8.55 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்ததும், ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றன. தீ பள்ளி வளாகம், அதனுடன் இணைந்த கட்டிடம் மற்றும் அருகில் உள்ள காரில் பரவியிருந்தது. தீயை முழுமையாக அணைத்து விட்டோம். எவ்வித உயிரிழப்பும், காயங்களும் ஏற்படவில்லை,” எனத் தெரிவித்தார்.

தீ விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது போன்ற தீவிபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.