கோவில் ஒன்னும் அரசியல் செய்யும் இடம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் ஜெய ஆனந்த் என்ற கர்ணன் கோவில் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் அவர் மீது இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுத்தது இந்த நடவடிக்கை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கர்ணன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி பல்வேறு கண்டனங்களை எழுப்பி இருக்கிறார் குறிப்பாக கோவிலில் என்பது அரசியல் தளம் கிடையாது அங்கு அரசியல் செய்வதற்கான இடம் இல்லை கோவில் என்பது அரசியல் செய்யும் இடம் இல்லை என கடுமையான கண்டத்தை தெரிவித்து இருக்கிறார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த பாஜக பிரமுகர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகர் ஆன ஜெய ஆனந்த். இவர் திருச்செந்தூர் முருகர் கோவிலில் பரம்பரைவாழ்  அர்ச்சகராக தொடர்ந்து சாமிக்கான பூஜை மற்றும் இதர வழிபாட்டு முறைகளை செய்து வருகிறார்.  இந்த நிலையில் தான் கடந்த மாதம் தனது எக்ஸ் தள பதிவில் திருச்செந்தூர் முருகன் கோவில் புனரமைப்பு குறித்து ஒரு கருத்தினை பதிவு செய்தார்.

ராஜகோபுரத்தின் கீழ் இருக்கும் கீழ் இருக்கக்கூடிய பழமையான கருங்கற்களை எடுத்துவிட்டு டைல்ஸ்களை இந்து சமய அறநிலையத்துறை பதிக்கிறார்கள் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு மீது இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அவருக்கு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக தனக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தன்னுடைய விளக்கத்தைகேட்கவில்லை  என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த போது,  கோவில் அர்ச்சகராக கோவிலில் பணியாற்றி கொண்டே கோயில் குறித்து தவறான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.

இது உண்மைக்கு புறம்பானது என அரசு தரப்பில்வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி கோவில் ஒன்றும் நீங்கள் அரசியல் செய்வதற்கான தளம் கிடையாது. கோவில் குறித்த இது மாதிரியான பதிவுகள் மக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை உருவாக்கும். இதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது. கோவில் ஊழியராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராக எப்படி இவ்வாறு சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்புகிறீர்கள் ?

உங்களது அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா ? என கடுமையான கண்டனத்தை எழுப்பி,  அறநிலையத்துறையின் இடைக்கால பணிநேக்கத்திற்கு தடை விதிக்க மறுத்து,  மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு,  இந்த வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்.