செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு  வழக்கு NIA க்கு வந்து மாற்றப்பட்டு, இந்த வழக்கின் குற்ற பத்திரிகையில் ISIS திவீரவாத அமைப்பின்தொடர்புகள் எல்லாம் அம்பலப்பட்டுக்  கொண்டிருக்க கூடிய இந்த சூழலில்….   இம்மாதிரியான மத அடிப்படைவாதிகள், 

தீவிரவாதிகள் கோவையில்  இன்னும்  செயல்பாட்டிலே இருக்கின்ற காரணத்தினால் இம்மாதிரியான செயல்பாடுகள் எங்கள் பகுதியினுடைய அமைதியை, பாதுகாப்பை பாதிக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்த விஷயத்தில் அரசு மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு,  எப்படி ஒரு புறத்திலே உங்களுக்கு…  இஸ்லாமிய வாக்குவங்கிக்காக நீங்கள் அரசியல் செய்கிறீர்களோ, 

அங்கு பாதிக்கபட்ட  இந்துக்கள் சார்பாகவும் நாங்கள் அவர்களுடைய குரலை அவர்களுடைய அக்கறையை இங்கு பதிவு செய்வதற்காக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம். ஆனால் வழக்கம்போல பேரவை தலைவர் அவர்கள் இந்த விஷயம் தொடர்பா நான் பேசும்போது சம்மந்தமே இல்லாமல் மத்திய பிரதேசம்,  குஜாரத்னு பதில் பேசிட்டு இருக்காரு.

மாண்புமிகு அமைச்சர்கள் பதில் சொல்லவேண்டியது எல்லாம்கூட மாண்புமிகு பேரவை தலைவர் எனக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். இன்றும் கூட எங்களுடைய கவன ஈர்ப்பு தீர்மானதிலே எங்களை முழுமையாக பேசவிடவில்லை.

நீங்க எல்லாரும் ஊடககாரங்க தான் பாத்துட்டு இருக்கீங்க. நான் முழுமையா பேசுன வீடியோவ கூட கொடுக்க மாட்டிக்கிறாங்க. எது எல்லாம் அவங்களுக்கு சாதகமா இருக்குதோ அந்த வீடியோ மட்டும் தான் வெளில வருது. முழுமையா நாங்க பேசுன வீடியோ கூட எங்களால வாங்க முடில. இதுதான் இவர்கள் ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை நடத்துகின்ற விசயமா நீங்க எல்லாம் பாக்கலாம்  என தெரிவித்தார்.