திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 27-ஆம் தேதி திருவண்ணாமலை கோவில் பின்வரும் இருக்கும் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர். அதன்படி கோவில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் இருக்கும் உண்டியக்களில் 3 கோடியை 28 லட்சத்து 37 ஆயிரத்து 802 ரூபாய், 340 கிராம் தங்கம், ஒரு கிலோ 895 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.