கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா அளித்த உத்தரவின் பெயரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவர்களின் மோதலுக்கு பின்னணியாக அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் வரலாறு ஆசிரியர் சீனிவாசன், புவியியல் ஆசிரியர் வீரவேல் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் இருப்பது உறுதியானது.

இவர்கள் இரு சமுதாய மாணவர்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் வீரவேல் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.