அண்ணன்- தங்கை உறவு என்பது ஒரு தனித்துவமான அன்பாகும். இதனை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஆசிரியர் ஒருவர் மாணவர் வீட்டுப்பாடம் முடிக்காமல் வந்ததற்காக அந்த மாணவரை அடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த மாணவனின் தங்கை அந்த மாணவனை கட்டிப்பிடித்துக் கொண்டு ஆசிரியரை அடிக்க விடாமல் தடுக்கிறார்.

மேலும் அண்ணனை திட்டுவதை பார்த்து மிகவும் அழுகிறார். உடனே ஆசிரியர் தங்கையின் பாசத்தை குறித்து அண்ணனிடம் கூறுகிறார். அந்த உணர்ச்சிகரமான வீடியோ அண்ணன் தங்கையின் பாசப்பிணைப்பை வெளிக்காட்டும் விதமாக இருந்தது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சமூக ஊடகப் பயனர்கள் பலரும் இது குறித்து உணர்ச்சிவசமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.