தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் திருச்சிறம்பலம் திரைப்படத்தில் நடித்து மீண்டும் பிரபலமானார். தற்போது ஆரம் திருகல்பனா என்ற மலையாளப் படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் தெலுங்கானா மாநிலத்திலுள்ள கிருஷ்ணாபுரம் எனும் கிராமத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் சூட்டிங் இடைவெளியில் அந்த கிராமத்திலுள்ள அரசு பள்ளிக்கு சென்ற நித்யா மேனன், அங்கிருந்த பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் பாடம் நடித்தினார். இது தொடர்பான வீடியோவை அவர் தன் சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்ட நிலையில், அது தற்போது வைரலாக பரவி வருகிறது.