ஐபிஎல் 2023 பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது..

இந்த சீசனின் ஐபிஎல்லின் பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடங்களை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் இறுதி கட்ட போட்டிகள் மே 23 முதல் மே 28 வரை நடைபெறும். சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானமும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானமும் இறுதிப் போட்டிகளுக்கான மைதானமாக இருக்கும்.

முதல் தகுதிச் சுற்று ஆட்டம் மே 23-ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. மே 24-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியும் சென்னை சூப்பர் கிங்ஸின் சொந்த மைதானமான சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மீதமுள்ள போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் மே 26-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் சொந்த மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.