தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதற்கான மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை மாவட்டத்தில் வருகின்ற மே 1-ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனை சார்ந்த பார்கள் மற்றும் எஃப்எல் உரிமம் பெற்ற கிளப்புகள் போன்றவைகள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார்.

இவற்றில் எந்தவித மதுபான கடைகளும் திறக்க கூடாது எனவும் தடையை மீறி மது கடைகளை திறந்து விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும் மே தினத்தை முன்னிட்டு சிலர் கள்ளத்தனமாக மதுபானத்தை விற்பனை செய்வார்கள் என்பதால் திருட்டுத்தனமாக மதுவை விற்பனை செய்வது தெரிய வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரும் எச்சரித்துள்ளனர்.